தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் ஆசையில் கட்சித் தொடங்கியவர்கள்: மு.க. ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள். அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2023, 12:27 pm

DIN

கோவை: முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள். அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் இன்று மாற்றுக் கட்சியினர்  திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திமுக. இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி 1991ஆம் ஆட்சி மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

தற்போது மதம், சாதி மூலம் சிலர் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறார்கள் என்று தமிழக முதல்வர் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர்  பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடை இன்றே களமிறங்குங்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடும் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இன்றே தேர்தல் பணியில் களமிறங்குங்கள்.

சென்றமுறை 39 தொகுதிகளில் வென்றோம், இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.