ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: மத்திய அரசு தகவல்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்கப்படும் என்று நாடளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, அருங்காட்சியகம்  அமைக்க தமிழக அரசு தொல்லியல் துறைக்கு 5.25 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் கட்ட சிறந்த கட்டடக் கலை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com