
தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி. இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
22 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வளித்துள்ள ஷாலினி, சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும் அஜித்குமார், மனைவி ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்நிலையில் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “குழந்தைகளுடன் இருக்கும்போது மனம் ஆறுதலடைகிறது” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு 90ஆயிரத்துக்கும் அதிகமான பேர் லைக் செய்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் ஹார்டின் எமோஜிக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.