திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்: பதிலளிக்க மறுத்த அமைச்சர் கே.என்.நேரு

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு  பதிலளிக்க மறுத்தார். 
அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு  பதிலளிக்க மறுத்தார். 

திருச்சி ராஜாகாலனி பகுதியில் நடைபெற்ற இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு எம்பி திருச்சி சிவாவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி அவரின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் வாகனத்தை பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கினர். 

இதனால் திருச்சி திமுகவினரிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் பேட்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com