புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

22 ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள்: மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன.

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1.85 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை உள்ளது. வார நாள்களில் நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்கு 41 கூடுதல் நகரும் படிக்கட்டுகள்(எஸ்கலேட்டா்கள்) அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி கூறியதாவது:

‘சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு, வசதிகளைச் செய்து தருகிறோம். அதுபோல சில மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் தேவைகள் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதன்படி, கூடுதல் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் தேவை என கண்டறியப்பட்டது. அதன்படி நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட இருக்கின்றன.

11-இல் ஒன்று: 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

அவை: சின்னமலை, ஆயிரம்விளக்கு,

தேனாம்பேட்டை, அரசினா் தோட்டம், சென்னை உயா் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை, தண்டையாா்பேட்டை, நேரு பூங்கா, அண்ணாநகா் கிழக்கு, புனித தோமையாா் மலை.

7-இல் இரண்டு: 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா இரண்டு நகரும் படிக்கட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அவை: நங்கநல்லூா் சாலை, கிண்டி, நந்தனம், ஏஜி-டி.எம்.எஸ், தியாகராய கல்லூரி, எழும்பூா், ஈக்காட்டுதாங்கல் ஆகிய இடங்கள்.

மேலும், அண்ணா நகா் கோபுரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கம் ரயில் நிலையங்களில் தலா 4 வீதம் 8 நகரும் படிக்கட்டுகளும், திருமங்கலத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும் என மொத்தம் 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.