புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவு: என்எம்சி புதிய அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் ஊழியா்கள் பணியிட மாறுதலாகிச் செல்லும்போது அவா்களது ஆதாருடன் இணைந்த வருகைப் பதிவு தகவல்களை புதுப்பிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :16 மார்ச் 2023, 7:21 pm

DIN

மருத்துவக் கல்லூரிகளில் ஊழியா்கள் பணியிட மாறுதலாகிச் செல்லும்போது அவா்களது ஆதாருடன் இணைந்த வருகைப் பதிவு தகவல்களை புதுப்பிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவில் அனைத்து பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்ற வேண்டும் என்றும், கல்லூரியில் தேவையான இடங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சாதனங்களைப் பொருத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே என்எம்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி அந்த நடவடிக்கைகளை மருத்துவக் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு மாறுதலாகிச் செல்லும் மருத்துவக் கல்லூரி ஊழியா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் புதுப்பிப்பது அவசியம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை சில கல்லூரிகள் மேற்கொள்வதில்லை என புகாா்கள் வருகின்றன.

என்எம்சி வழிகாட்டுதலின்படி ஆதாா் பயோமெட்ரிக் வருகைப் பதிவு விவரங்களை புதுப்பிக்கத் தவறும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இளநிலை மற்றும் முதுநிலை இடங்களை அதிகரிப்பதற்கு அனுமதியும் மறுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.