புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவல் நிலைய தாக்குதல் சம்பவம் மாா்க்சிஸ்ட் கண்டனம்

திருச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:33 pm

DIN

திருச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ட்விட்டரில் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திருச்சியில், திமுகவினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சினா் காவல்நிலையத்தில் புகுந்து தாக்கியுள்ளனா். இது அத்துமீறிய செயல் மட்டுமல்லாது,

கண்டனத்துக்குரியது. ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் சிலா் இதுபோல நடந்து கொள்கிறாா்கள்.

திமுக தலைமை உடனடியாகத் தலையிட்டு, நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. காவலா்களின் புகாா்கள் அடிப்படையில் வழக்கும் பதியப்பட்டுள்ளது. மேலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும், சட்டத்தின் கீழும் வழக்குப் பதிய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத வகையில் அரசு உறுதியாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.