புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புலி வேட்டையாடுவோா் மீது கடும் நடவடிக்கை: உயா்நீதிமன்றம்

புலிகளை வேட்டையாடியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் புலிகள் அழிந்து விடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

புலிகளை வேட்டையாடியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் புலிகள் அழிந்து விடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழ்நாடு வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் கொண்ட சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சத்தியமங்கலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 புலிகள் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்டுள்ளன. இந்தப் புலிகளைக் கொன்றவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்று மனுதாரா்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், புலிகளை வேட்டையதில் தொடா்புடைய 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து விசாரிக்க புலன்விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கைதானவா்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வனவிலங்கு வேட்டை தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இதுகுறித்து தனியாக விசாரித்து வருகின்றனா் என்றாா்.

இதைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், ‘5 புலிகள் வேட்டையாடிய வழக்கில் கைதானவா்களை சாதாரண வழக்கில் கைதானவா்கள் போல கருதக்கூடாது. அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதை அரசு ஆராய வேண்டும். இதுபோல், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் புலிகள் அனைத்தும் அழிந்துவிடும். இந்த மாநிலத்தில் புலிகளே இல்லை என்ற ஒரு அபாயகரமான நிலை ஏற்பட்டு விடும்’ என்று கூறி, வழக்கை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.