சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

சென்னை சேப்பாக்கத்தில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவாக இந்த மைதானத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் நவீன வசதிகளுடன் கூடிய 2 பெவிலியன்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். புதிய கேலரிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார்.

தொடர்ந்து புதிய கேலரியையும் அவர் பார்வையிட்டார். கிரிக்கெட் வீரர்கள் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மொத்தமாக 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வகையில் மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது. முதல் தள உள்ளரங்கில் நவீன வசதிகளுடன் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சேப்பாக்கம் மைதானத்திற்குள் வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் சீல்வைக்கப்பட்ட 3 கேலரிகளை மீண்டும் திறக்க 2020ல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புனரமைக்கப்பட்ட கேலரிகளில் முதல்முறையாக வரும் 22ஆம் தேதி இந்தியா-ஆஸிதிரேலியா ஒருநாள் போட்டியை ரசிகர்கள் பார்க்கவுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com