சேலத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வெள்ளிக்கிழமை பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு நிலவியது. 
சேலத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
Published on
Updated on
2 min read

சேலம்: ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஆவின் பால் கூட்டு அமைப்புகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வெள்ளிக்கிழமை பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு நிலவியது. 

தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில்  ஆவின் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டியும், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு அடித்தளமாக செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த தடையாக உள்ள விதி 149 வகை முறைகளில் இருந்து விதிவிலக்கு அளித்து அவர்களை ஆவின் நிறுவனம் பல பணியாளர்களாக அமிரத்திட வேண்டும், ஆவின் பால் வழங்கும் அனைத்து கறவை இனங்களுக்கும் ஆவின் நிறுவனச் செலவில் இலவச காப்பீடு வசதி செய்து கொடுத்திட வேண்டும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு உள்ள அவசரகால மருத்துவ சேவை ஆவின் சங்கப் பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், கிராம சங்க பால் கொள்முதலில் ஐஎஸ்சி பார்முலாவை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை பால் உற்பத்தியாளர்கள் அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏற்றி தமிழக அரசுக்கு தெரிவித்தனர். 

ஆனால், தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வெள்ளிக்கிழமை முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் மற்றும் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் வெள்ளிக்கிழமை கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை ஊற்றாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழ்நாடு அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டுமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால், வழக்கம் போல பால் ஊற்ற வேண்டும் எனும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பால் உற்பத்தியாளர்கள் இதனை ஏற்க மறுத்து தங்களுக்கு உற்பத்தி மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

சேலம் மாவட்டம் முழுவதும் இதேபோன்று பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com