
சென்னை மாநகர் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 20) வரை 4 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகர் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், தாம்பரம், சென்னை விமான நிலையம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.