பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

மணிப்பூரில் தமிழர் உடைமைகள் எரிப்பு!: பழ. நெடுமாறன் வேண்டுகோள்

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் இழப்பீடு பெறவுமான அவசர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு...
Published on

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் இழப்பீடு பெறவுமான அவசர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் மூண்டு எழுந்துள்ள கலவரத்தில் 40-க்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்களின் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அங்குள்ள தமிழர்கள் எனக்குத் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கு வாழும் தமிழ்க் குடும்பங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் இழப்பீடு பெறவுமான அவசர நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ளும்படி பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com