திருப்பூர் சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா கோலாகலம்!

திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்ரகுப்தர்.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்ரகுப்தர்.

திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ள சின்ணாண்டிபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்ரகுப்தர் திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில் இரண்டாவதாக சித்ரகும்தருக்கு இங்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 

இந்தக் கோயிலின் சிறப்பாகும். இங்கு கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்ரகுப்தர் மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சித்ரகுப்தரை தரிசனம் செய்தால் மனிதர்களின் கர்ம வினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது. சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சித்ரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. 

திருப்பூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், பெண் பக்தர்கள் சித்ரகுப்தருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் 4 ஆயிரம் அரிசியைக் கொண்டு உணவு தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com