சித்ரா பௌர்ணமி: சதுரகிரி மலைக் கோயிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று காலை முதல் திரளான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். 
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று காலை முதல் திரளான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் உள்பட 8 நாள்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில், சித்திரை மாத பௌா்ணமியொட்டி மே 3 முதல் மே 6-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதியளித்தது.

பௌர்ணமியையொட்டி வெள்ளிக்கிழமையான இன்று தாணிப்பாறை நுழைவு வாயிலில் திரளான பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.  காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com