ஆளுநர், முதல்வர் குறித்த 386 அவதூறு விடியோ யூடியூப் பதிவுகளை நீக்க பரிந்துரை!

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 386 விடியோ பதிவுகளை நிக்குமாறு யூடியூப்க்கு பரிந்துரை செய்துள்ளது. 
ஆளுநர், முதல்வர் குறித்த 386 அவதூறு விடியோ யூடியூப் பதிவுகளை நீக்க பரிந்துரை!


சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 386 விடியோ பதிவுகளை நிக்குமாறு யூடியூப்க்கு தமிழ்நாடு காவல் துறையின் சைபர் க்ரைம் பரிந்துரைத்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் விடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 386 விடியோ பதிவுகளை நிக்குமாறு யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் 61 செயலிகளை நீக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com