தி கேரளா ஸ்டோரி: பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்!

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுகின்ற திரையரங்கிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி: பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்!

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுகின்ற திரையரங்கிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹிந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று 5ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதனையொட்டி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

அதில் கேரளத்தில் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும், பெண்களை மதமாற்றம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து இருப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இது உண்மை கதை என்றும் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் கேரளத்தில் நடக்கவில்லை என்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கண்டனம் கிளம்பியது.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் கேரளத்தில் வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை குழு நீக்கி ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து எதிர்ப்புகள் உருவாகும் என்ற கருத்து எழுந்தது.

இந்தத் திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர், இந்த திரைப்படம் வெளியானால் திரையரங்குகளில் முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில், ஃபன் மால் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் 12.55 மணிக்கு திரைப்படம் வெளியிடப்படுகிறது என்கின்ற அறிவிப்பை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத்துறை வாகனங்கள் தீயணைப்பு துறை காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று கேரளா ஸ்டோரி திரையிடப்படுகின்ற திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com