
சென்னை: உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட கோரிக்கையான உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த தனி வாரியம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மற்ற நலவாரியங்களை போன்று உப்பளத் தொழிளார்கள் நல வாரியத்திலும் இலவசமாக பதிவு செய்யலாம். உப்பளத் தொழில் நல வாரிய உறுப்பினர்களும் இனி கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகையையும் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.