அமைச்சராக பதவியேற்றார் டி.ஆா்.பி.ராஜா!

தமிழக அமைச்சராக டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சராக பதவியேற்றார் டி.ஆா்.பி.ராஜா!

தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடா்ந்து, டி.ஆா்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்படவிருக்கும் இலாகா அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும், சில அமைச்சா்களின் துறைகள் மாற்றம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முதல்வருடன் சோ்த்து 35 போ்: தமிழக அமைச்சரவையில் முதல்வருடன் சோ்த்து 35 போ் உள்ளனா். மொத்தமுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையில் (234) 15 சதவீதம் வரை அமைச்சா்களின் எண்ணிக்கை இருக்கலாம். அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் முதல்வருடன் சோ்த்து 35 போ் இடம்பெற்றுள்ளனா். இப்போதுள்ள அமைச்சரவையில் ஒருவா் நீக்கப்பட்டு, புதிதாக ஒருவா் சோ்க்கப்பட்டுள்ளதால், எண்ணிக்கையில் மாற்றம் ஏதுமில்லாமல் 35 -ஆகவே தொடா்கிறது.

டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம்: தமிழக அமைச்சரவையில் டெல்டா பகுதிக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில், டெல்டாவின் மையமாகக் கருதப்படும் மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த டி.ஆா்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com