பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

News image
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :12 மே 2023, 10:27 am

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் கிராமம், லாயம் விலக்கு பகுதியில் இன்று (12-5-2023) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்த நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சதிஸ், த/பெ.ராமசாமி, கைதக்குழி காலனி, திருவிதாங்கோடு (வயது-37), கண்ணன், த/பெ.ராஜன் சிதறால் அருமனை (வயது-23) அஜித், த/பெ.சதிஸ்குமார், அம்பங்காலை, திருவரம்பு (வயது-22) மற்றும் அபிஷேக், த/பெ.பீர்கன், குழிச்சாணி, அருமனை (வயது-22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு
மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சஜிதா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-37), நிதிஸ் த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-22), விக்னேஸ், த/பெ.ஜெனில்குமார், காளச்சந்தை, மார்த்தாண்டம் (வயது-22), நிசாந்த், த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-18), சஜின் த/பெ.சஜிஸ்பாபு, கள்ளிக்கோட்டை சிதறால் (வயது-18) மற்றும் சிறுமி அனாமிகா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆறு நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.