
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்தப்பட்ட சோதனையில் 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டில் கள்ளச்சாரயம் குடித்து 17 பேர் உயிரிழந்த நிலையில், காவல் துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக நடந்த கள்ளச்சாராய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இதுவரை 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16, 493 ஐஎம்எப்எல் மதுபான பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், 19 ஆயிரத்து 28 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.