பேனா சின்னம்: உச்சநீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!
மெரினா அருகே கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


மெரினா அருகே கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து ஏற்கெனவே மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பில் ஜெயக்குமார் இன்று மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கா் பரப்பளவில் அரசு சாா்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு இடையில் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டா் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 134 உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...