மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது காவல்துறைக்கு தெரிந்திருக்கும், ஆனால் நடவடிக்கை இல்லை.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை விற்பனை செய்தவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்றார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பாதிக்கப்பட்டோரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


