தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மின் விநியோகம்: தமிழக அரசுக்கு மத்திய எரிசக்தித் துறை பாராட்டு

தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித

News image
Updated On :16 மே 2023, 6:46 am

DIN

சென்னை: தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்  கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள் 11-5-2023 அன்று எழுதியுள்ள கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும் என்றும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.