மே 21ல் தமிழ்நாட்டிற்கு வருகிறார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற மே 21 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற மே 21 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். 

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பெங்களூரு​வில் நாளை மறுநாள் (மே 20) அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூரு வரும் ராகுல் காந்தி மே 21 அன்று தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளார். 

ஸ்ரீபெரும்புதூரில் தனது தந்தையும் மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தியின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com