10ம் வகுப்பு துணைத் தேர்வு: மே 23 முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

தேர்ச்சி அடையாத மாணவர்கள் மே 23 முதல் 27 வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில் 91.39 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

இந்நிலையில், தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகள் மே 23ஆம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. மே 27ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் ஜூன் மாதம் துணைத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com