புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.05 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 88.85 சதவிகித மாணவர்களும், 93.30 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 100% தேர்ச்சியை நோக்கி அரசு சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி எடுக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% கூடுதல் தேர்ச்சி ஆகும்.
இதையும் படிக்க | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
அஸ்ஸாம் தேர்தல்: காங்கிரஸின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பழங்குடியினருக்கு அதிக வாய்ப்பு!!

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

