

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.05 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் 88.85 சதவிகித மாணவர்களும், 93.30 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 42.42 சதவிகிதமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.