உதகையில் மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (மே 19) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி, 125-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (மே 19) முதல் 23-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இதனால், மலர் கண்காட்சியையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 3ஆம் தேதி பணி நாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.