ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்

ஏற்காடு கோடை விழாவின் முதல் நிகழ்வாக மலை ஏறும் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்
Published on
Updated on
1 min read

ஏற்காடு கோடை விழாவின் முதல் நிகழ்வாக மலை ஏறும் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46 வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வழக்கமான உற்சாகத்துடன் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கி வருகின்ற 28 ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில் கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மலை ஏறும் பயிற்சி இன்று காலை தொடங்கியது.

மாவட்ட வனத் துறை, விளையாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த மலையேறும் பயிற்சியினை மாவட்ட வன அலுவலர் சேசாங்ரவி வனச் சரகர் முரளிதரன் கனிம வளத் துறை துணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

ஏற்காடு அடிவாரத்தில் இருந்து குதிரைவழி என்ற பாதையில் இந்த மலையேறும் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சிறுவர், சிறுமிகள் மற்றும் மாணவ, மாணவிகள் முதியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

வழிநெடுத்திலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து கிராம மக்களிடையே மலை ஏறும் பயிற்சியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com