சிறுதானிய கண்காட்சியினை திறந்து வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

சிறுதானிய கண்காட்சியினை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 
சிறுதானிய கண்காட்சியினை திறந்து வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
Published on
Updated on
1 min read

சிறுதானிய கண்காட்சியினை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 

வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் இன்று (24.05.2023) பன்னாட்டு சிறுதானிய கருத்தரங்குகளில் அமைக்கப்பட்ட சிறுதானிய கண்காட்சியினை திறந்து வைத்தார்.

புதுதில்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை உயர்கல்வி திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி ரூ. 24.86 கோடி நிதி அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி கற்றல் முறையை மேம்படுத்தி, வேளாண் வணிகத்தை நிர்வகிப்பதற்கு தலைவர்களை உருவாக்கவும் வேலை தேடும் மாணவர்கள் காட்டிலும் வேலை வழங்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக பல்கலைக்கழகத்தின் சேவைத் தரத்தையும், நிர்வாகத்தையும் மேம்படுத்த கல்வி மேலாண்மையில் சீர்திருத்தங்கள் செய்வதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மொழி கற்றல் பயிற்சி கூடங்கள், பெரிய தரவு பகுப்பாய்வுக் கூடம், விரிவாக்கக் கூடம், கணினி அறிவு சார்ந்த துல்லிய வேளாண்மை பயிற்சி கூடங்களும் நிறுவப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இயங்கி வரும் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இயங்க கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வி வளாகம் பசுமைமயமாக்கல், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல், சமுதாய கோட்பாடுகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயலாக்கப்பட்டுள்ளது.

24.05.2023 வேளாண்மைத்துறை அமைச்சர் மெய்நிகர் உண்மை (Virtual Reality) ஆய்வுக்கூடத்தை பார்வையிட்டு அங்கு தயாரிக்கப்பட்ட 15 வேளாண்சார்ந்த பாடத்தொகுதிகளை (Modules) பற்றி தெரிந்துக் கொண்டார்.

மாணவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பாடத் தொகுதியை வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செயல்படுத்தி காட்டினார். பல்கலைக்கழகத்திலுள்ள மொழி கற்றல் பயிற்சி கூடத்தை பார்வையிட்டார்.

இங்கு மாணவர்கள் ஜெர்மன் மற்றும் பிரென்சு மொழியில் கலந்துரையாடினார். மேலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேச பயிற்சி எடுத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் நவீன மின்னனு விரிவாக்க கூடத்தை பார்வையிட்டார்கள். இங்கு மாணவர்கள் மின்னனு குறும்படங்கள் விளம்பர பலகைகள் உருவாக்குவதை பற்றி விளக்கினார்.

தற்போது வெளிநாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறும் 37 மாணவர்கள் நிகழ்நிலை (Online) கூட்டத்தின முலம் அமைச்சர் அவர்களுக்கு தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளையும் அதனால் அடையக்கூடிய பலன்களையும் தெரிவித்தனர். துபாய் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென்கொரியா மலேசியா நாடுகளிலிருந்து மாணவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com