இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் வானியல் நிகழ்ச்சிகள்!

ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் வானியல் நிகழ்ச்சிகளை கண்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

News image
தொலைநோக்கி மூலம் காணும் மக்கள்
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் வானியல் நிகழ்ச்சிகளை கண்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சேலம் சுற்றுலாத்துறை ஆகிய துறைகள் இணைந்து ஏற்காடு 46-வது கோடைத் திருவிழாவை நடத்தி வருகிறது.

இந்நிகழ்வில் மலர் கண்காட்சி உள்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும்  சயின்ஸ் சொசைட்டி இணைந்து ஏற்காட்டில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி, பகல் நேர வானியல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக 10-கும் மேற்பட்ட பல்வேறு விதமான திறன்வாய்ந்த, விலையுயர்ந்த தொலைநோக்கிகளோடு தமிழகம் முழுவதும் இருந்து 16 கருத்தாளர்கள் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர்.

Story image

ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களான அண்ணா பூங்கா, லேடிஸ் வியூ பாயிண்ட், சில்ட்ரன் வியூ பாயிண்ட், சேர்வராயன் கோவில், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா(பொட்டானிக்கல் கார்டன்), லேக் பார்க் உள்பட பல சுற்றுலாத் தளங்களில் பகல் நேர வானியல் நிகழ்ச்சியும், இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியும் தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்கள் நடத்தி வருகின்றனர்.

பகல் நேர வானியல் நிகழ்ச்சியில், பல்வேறு வானியல் சார்ந்த கருத்துகள் மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. சூரியனின் கரும்புள்ளிகள் தொலைநோக்கி வழியே சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியில் பிறை நிலா, வெள்ளியின் பிறை மற்றும் சில நட்சத்திர கூட்டங்களை கண்டு ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த விளக்கங்களை தமிழ்நாடு அஷ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

Story image

சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு கண்டு களித்து உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் தொலைநோக்கிகள் மூலம் வான்நோக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது புது முயற்சியாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.  இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு அரசுக்கும், கருத்தாளர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.