வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு: எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.


எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 2022, 2023-ஆம் ஆண்டுகளில் பிளஸ்-2 வகுப்பு முடித்த எஸ்.சி மற்றும் எஸ்.டி இனத்தை சாா்ந்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு தாட்கோ நிறுவனம் சாா்பில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி (கம்யூட்டா் டிசைனிங்), தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் பி.சி.எ., அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஎ, பிபிஎ, பிகாம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலை.யில் இன்டகிரேட்டட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்டபடிப்புகளில் சோ்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுகொடுக்கப்படும்.
விண்ணப்பதாரா்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பைச் சோ்ந்தவா்களாகவும், 2022-இல் 60 சதவீதம், 2023-இல் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றவா்களாகவும் இருக்க வேண்டும். இவா்களின் குடும்ப வருவாய் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
எச்.சி.எல் நிறுவனம் மூலம் நடத்தப்படும் நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைந்து படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் எனும் தாட்கோ இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...