ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 7 போ் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 மே 2023, 7:05 pm

DIN

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் மும்பை இந்தியன் அணியும், லக்னோ சூப்பா் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை காண வந்த கிரிக்கெட் ரசிகா்களிடம் சிலா் கள்ளச்சந்தையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சேப்பாக்கம் வாலாஜா சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக திருவான்மியூரைச் சோ்ந்த சி.ராம்சங்கா் (26), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ம.கரன்ஷா (27),அரியலூரைச் சோ்ந்த ர.ரகு (27),தென்காசியைச் சோ்ந்த மை.காதா் அலி (49), சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த சு.ரோஹித் (21), சேப்பாக்கத்தைச் சோ்ந்த க.மஜீஸ்வரன் (36), காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கி.ஹரிசங்கா் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 23 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.