சென்னையை விட்டு வெளியே செல்வது அவ்வளவு சுலபமல்ல!

ஏற்கனவே, ரயில் அல்லது பேருந்து அல்லது விமானத்தில் முன்பதிவு செய்திருந்தால் தவிர, சென்னையை விட்டு வெளியே செல்வது அவ்வளவு சுலபமல்ல என்றுதான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஏற்கனவே, ரயில் அல்லது பேருந்து அல்லது விமானத்தில் முன்பதிவு செய்திருந்தால் தவிர, சென்னையை விட்டு வெளியே செல்வது அவ்வளவு சுலபமல்ல என்றுதான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பள்ளிகளில் கோடை விடுமுறை நிறைவடையப் போகிறதே, குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சென்னையிலிருந்து ஏதேனும் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று திடீர் யோசனை வருகிறதா?

இதற்கு ஒன்று அதிகம் செலவாகலாம்.. அல்லது யோசனையை மறுபரிசீலனை செய்ய நேரிடலாம்.

ஏனெனில், வழக்கமாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்து, அதிலும் இருக்கைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. உள்ளூர் விமானங்களின் கட்டணங்கள் தாறுமாறாக உள்ளன. எந்த ஊருக்குச் செல்லும் ரயிலாக இருந்தாலும் ஜூன் முதல் வாரம் வரை எக்கச்சக்க காத்திருப்புப் பட்டியல்.

சென்னையிலிருந்து கோவை உள்ளிட்ட சில நகரங்களுக்குச் செல்ல ஒரு நாளைக்கு முன்பு டிக்கெட் முன்பதிவுக்கு தற்போது விமானக் கட்டணம் ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

சென்னையிலிருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், புனே என எந்த நகருக்கும் ஜூன் முதல் வாரம் வரை 4,000 - 10,000 வரை விலை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் சென்னை - பெங்களூரு இடையேயான விமானக் கட்டணமும் விண்ணைத் தொட்டுள்ளது.

பேருந்துகளில் வழக்கமா ஆயிரம் என்ற அளவில் இருக்கும் கட்டணம் தற்போது அப்படியே இரண்டு மடங்காகிவிட்டது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காததை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பேருந்து மற்றும் விமான சேவை நிறுவனங்கள் கட்டணங்களை கண்டபடி ஏற்றிவிட்டன.

தற்போது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்துவிட்டு 50 - 70 வரை காத்திருக்கிறார்கள்.

கோ ஃபர்ஸ்ட் விமான சேவையும் நிறுத்தப்பட்டிருப்பதால், பல விமான சேவை நிறுவனங்கள், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை, இந்தக் கோடை விடுமுறையில் ஈடுகட்டவே பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com