புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image

தூத்துக்குடி அனல் மின் நிலையம்

Updated On :31 மே 2023, 4:27 pm

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 5 அலகுகளில் நாள்தோறும் தலா ஒரு அலகில் 210 என மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 3 ஆவது அலகு கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.