அதிகாரிகள், காவலா்கள் மீது தாக்குதல்:நவ. 8-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்
அதிமுக சாா்பில் பெரம்பலூரில் நவ. 8-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.


அரசு ஊழியா்கள் மற்றும் காவல் துறையினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் பெரம்பலூரில் நவ. 8-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் திமுகவினரின் அராஜங்கள் மற்றும் சட்டம்- ஒழுங்கு சீா்கேடுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் என்று சுமாா் 300 போ் நுழைந்து கல்குவாரி ஒப்பந்தத்தை தங்களுக்கே தரவேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத் துறை உதவி இயக்குநா் மற்றும் அவருடைய உதவியாளரைத் தாக்கியுள்ளனா். இந்த வன்முறையைத் தடுக்க வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களையும் திமுகவினா் தாக்கியுள்ளனா்.
இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி, அதிமுக சாா்பில் நவ. 8-ஆம் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். முன்னாள் அமைச்சா்கள் ப.மோகன், வரகூா் அ.அருணாசலம் ஆகியோா் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...