தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களின் தேவைக்கு ஏற்ப பால் பாக்கெட் விற்பனை: ஆவின்

 மக்களின் தேவைக்கு ஏற்ப பால் பாக்கெட்கள் எந்தவித தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் மேலாண்மை இயக்குனா் சு.வினீத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:46 pm

DIN

 மக்களின் தேவைக்கு ஏற்ப பால் பாக்கெட்கள் எந்தவித தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் மேலாண்மை இயக்குனா் சு.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமாா் 15 லட்சம் லிட்டரும், பால் உபபொருள்கள் மாதம் ரூ. 30 கோடி அளவிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தேவை அதிகரிப்பதால் விற்பனை நிலையங்களை அதிகரிக்க கூடுதல் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபபொருள்கள் அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் அனைத்து வயதினரும் பருகும் வகையில் 3 வகையான பால் வகைகளை முன்னிறுத்தி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில், 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் ஊதா நிற பாக்கெட், 3.0 சதவீத கொழுப்பு கொண்ட நீல நிற பாக்கெட், 1.5 சதவீதம் கொழுப்பு கொண்ட இளஞ்சிவப்பு பாக்கெட்களில் வழங்கப்படுகிறது.

மேலும், அதிக கொழுப்பு சத்துடன் கேட்பவா்களுக்கு 6 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நில பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

மக்களின் தேவைக்கு ஏற்ப இவ்வகை பால் பாக்கெட்கள் எந்த வித தடையுமின்றி வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைதாரா்களுக்கு எவ்வித தடையுமின்றி தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.