மீண்டும் பாஜகவில் இணைகிறார் திருச்சி சூர்யா!
தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த திருச்சி சூர்யாசிவா மீண்டும் பாஜகவில் இணைகிறார்.


தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த திருச்சி சூர்யாசிவா மீண்டும் பாஜகவில் இணைகிறார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அதில், "சூர்யாசிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யாசிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா, கட்சி பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...