பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவின் தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்ட பாஜக கொடியை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தைச் சேதப்படுத்தியதாக காவல் துறையினர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுவதோடு காவல் துறையினர் ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவையில் முடிவு!
இந்நிலையில் பனையூரில் பொக்லைன் இயந்திரத்தைச் சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி கடந்த அக். 30 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.