சென்னை: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தமிழக அரசின் தீவிர செயல்பாடுகளால் மழையின் தாக்கம் மக்களை பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். லேசான தூறுல் போட்டதுமே, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழவான பகுதிகளில் வெள்ளம் தேங்கிவிடும். ஆனால், தற்போது கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டதால், பல இடங்களில் கனமழை பெய்தாலும் ஓரிரு மணி நேரத்தில் மழை வெள்ளம் வெளியேறி விடுவதாக மக்களே சொல்கிறார்கள்.
இதையும் படிக்க.. இஸ்ரேல்: இந்தியா நிலை மாறுவது ஏன்?
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிடன் மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மே 4-ல் தமிழ்நாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு
விலங்குகளின் தோழன்...
மகான்களின் வழித்தடத்தில் மதுரகவி
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

