வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

குறைந்த விலையில் பட்டாசு என மோசடி: சைபர் க்ரைம் காவல்துறை எச்சரிக்கை

குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:16 am

DIN

குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை, நவம்பா் 12-ஆம் தேதி கொண்டாடபடுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறு விறுப்பு அடைந்துள்ளது. இதற்காக தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை வெடி பொருள் சட்டத்தின் கீழ் தீயணைப்புத் துறை விதித்துள்ளது.

தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான், அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும். பட்டாசுகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடி பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மோசடி குறித்த புகாரினை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சென்னை சைபர் க்ரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.