
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மின்சார பாய்ந்து 57 வயது பெண் கனகா திங்கள்கிழமை உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகா. இவர் திங்கள்கிழமை காலை வீட்டின் அருகே மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியை எதிா்பாராத விதமாக கனகா மிதித்ததில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரது அலறலைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து பார்த்த போது மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து கனகா பலியானது தெரியவந்தது.
இதையும் படிக்க | புதுச்சேரி முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் காலமானார்
இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் மின்வாரி ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்சாரத்தை நிறுத்தினர். சோழவரம் போலீசார் கனகா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த சம்பவத்துக்கு மின்வாரி ஊழிய அதிகாரிகளைக் குற்றம் சாட்டிய மக்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.