அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்: செல்லூர் ராஜு

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 
அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்: செல்லூர் ராஜு
Published on
Updated on
1 min read

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், 'மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்தன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை, மதுரையில் உள்ள 2 அமைச்சர்களும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது, மதுரையில் 2 அமைச்சர்களும் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதியைப்போல மாற்றி இருப்போம். 

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை குறைக்க வழியில்லை, உள்நாட்டு உற்பத்திக்கு உதவி செய்ய முடியவில்லை, இதில் வெளிநாடு முதலீடுகளை எப்படி கொண்டு வரப்போகிறார்கள்?

விஜய் நடித்த லியோ படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது, ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் கீழிருந்து மேல்மட்டம் வரையிலும் கலெக்ஷன், கரப்ஷன்.

மதுரை மாநகராட்சி செயலிழந்து போய்விட்டது, மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும், மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோயில்களின் வருவாயில்தான் சிறு கோயில்கள் செயல்படுகின்றன. 

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார், அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத் துறையை கலைக்க முடியுமா? அறநிலையத்துறையில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம், யார் யாரோ ஆட்சிக்கு வரப்போகிறோம் என சொல்லும்போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை, 2026ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக கொண்ட அதிமுக ஆட்சி அமைக்கும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com