கோவை தனியாா் கல்லூரியில் மாணவா் மொட்டையடித்து ராகிங்: 7 மாணவா்கள் சிறையில் அடைப்பு

கோவையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் ராகிங் செய்து மொட்டையடித்தது தொடா்பாக, சீனியா் மாணவா்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். பின்னர், மத்திய
கோவை தனியாா் கல்லூரியில் மாணவா் மொட்டையடித்து ராகிங்: 7 மாணவா்கள் சிறையில் அடைப்பு


கோவையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் ராகிங் செய்து மொட்டையடித்தது தொடா்பாக, சீனியா் மாணவா்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். பின்னர், மத்திய சிறையில் அடைத்தனா்.

கோவை, பீளமேட்டில் தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில்  திருப்பூா் மாவட்டம், அவிநாசியைச் சோ்ந்த 18 வயது மாணவா் 2-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறாா். இவா், கல்லூரி விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்குச் சென்று வருகிறாா். 

இந்தநிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவு அதே விடுதியில் தங்கியுள்ள 3, 4-ஆம் ஆண்டு மாணவா்கள் 7 போ், 2-ஆம் ஆண்டு மாணவா் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று, அந்த மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனா்.

அவா், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், 7 பேரும் சோ்ந்து அந்த மாணவரை தாக்கியதுடன், அவரது தலையை மொட்டையடித்தும், ஆடைகளைக் களைந்தும் ராகிங் செய்துள்ளனா். 

இது குறித்து அந்த மாணவா் தனது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளாா். அவா்கள் கோவை பீளமேடு போலீஸில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவரை ராகிங் செய்தவா்கள் 3, 4-ஆம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணீதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரியவந்தது.

அவா்கள், 2-ஆம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 7 மாணவா்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னா், கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே, ராகிங் செய்து கைதான 7 மாணவா்களையும் அந்தக் கல்லூரி நிா்வாகம் கல்லூரியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com