50 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா நதியில் பெருக்கெடுத்து ஓடும் நீர்!

தொடர் மழை காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா நதியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
வையம்பாளையம் தடுப்பணை நிரம்பி கௌசிகா நதிக்குச் செல்லும் மழை நீர்.
வையம்பாளையம் தடுப்பணை நிரம்பி கௌசிகா நதிக்குச் செல்லும் மழை நீர்.

தொடர் மழை காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா நதியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

கோவை மாவட்டம் குருடி மலையிலிருந்து உற்பத்தியாகும் மழை நீரானது கௌசிகா நதி, நொய்யல் நதியில் கலக்கும். இந்த கௌசிகா நதியில் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்யத் துவங்கியது. இன்று காலை வரை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.  இதனால் அனைத்துத் தடுப்பணைகளும் முழுவதுமாக நிரம்பியதால் கௌசிகா நதிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால் கௌசிகா நதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com