மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டுகிறது!

தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

DIN


கம்பம்: தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது, அதன்காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,230 கன அடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,853 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு மிக குறைந்த அளவான 105 கன அடியாக இருந்தது.

நீர் வரத்து அதிகமாகவும், நீர் வெளியேற்றம் குறைவாகவும் இருப்பதால் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை 128.40 அடியாக இருந்த நீர்மட்டம், வெள்ளிக்கிழமை 129.10 அடியாக உயர்ந்தது.

இதுகுறித்து அணையின் பொறியாளர் ஒருவர் கூறும்போது, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது, வரும் நாள்களில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 129.10 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 4,503.50 மில்லியன் கன அடி, நீர் வரத்து வினாடிக்கு 1,853 கன அடி, தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 105 கன அடியாக உள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 2.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 3.8 மி.மீட்டர் மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.