'கடவுள் கைவிட்டதால்' கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!

'கடவுள் கைவிட்டதால்' கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!

நம்பிய கடவுள் தன்னை கைவிட்டதால் மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்த கொத்தவன் சாவடி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
Published on

சென்னை: நம்பிய கடவுள் தன்னை கைவிட்டதால் மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்த கொத்தவன் சாவடி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி திருக்கோயில் வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளிகிருஷ்ணன் என்பவர் போதையில் பெட்ரோல் குண்டினை வீசியுள்ளார்.

கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். 

தகவல் அறித்து கொத்தவால்சாவடியில் இருந்து விரைந்து வந்த போலீசார் முரளிகிருஷ்ணணை கைது  செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கோயிலில் வழிபட்டு வருவதாகவும், இந்த கடவுள் தனக்கு திருப்பி ஏதும் செய்யவில்லை எனக் கூறி மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com