அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்தினரை மர்ம நபர்கள் தாக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் ஏஜிஎஸ் திரையரங்கில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆரின் உறவினர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது 3 பெண்கள் உட்பட மர்ம நபர்கள் ஆறு பேர் திரையரங்கில் அதிக சத்தம் எழுப்பி கொண்டிருந்தனர்.
அதனை அமைச்சரின் பேரன் தட்டி கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அந்த நபர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த அமைச்சரின் பேரன் மற்றும் உறவினர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.