தீபாவளி: 2 நாட்களில் 4.83 லட்சம் பேர் பயணம்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டும் இதுவரை 4,83,680 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டும் இதுவரை 4,83,680 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம், கே.கே.நகா் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் மூலமாகவும் பேருந்துகள் இயக்கப்பட்டன. 

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிகள், பணிகளை முடித்து கொண்டு தங்கள் சொந்த ஊா்களுக்கு பலரும் சென்ால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இது ஒருபுறமிருக்க சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டன. 

விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து, இடம் பிடித்து பயணித்தனா். இந்த நிலையில் தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டும் இதுவரை 4,83,680 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 

இன்று சனிக்கிழமை என்பதால் மேலும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com