வௌவால்களை பாதுகாக்க பட்டாசுகளை தவிர்த்து தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழந்தின்னி வௌவால்களை பாதுகாக்க, தீபாவளி திருநாளிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வரும் கிராம மக்கள், மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 
வௌவால்களை பாதுகாக்க பட்டாசுகளை தவிர்த்து தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!



சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழந்தின்னி வௌவால்களை பாதுகாக்க, தீபாவளி திருநாளிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வரும் கிராம மக்கள், மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தீபாவளி திருநாள் என்றாலே நினைவுக்கும் முதலில் வருவது விதவிதமான பட்டாசுகள்தான். வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை, புத்தாடை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தால்தான் தீபாவளி திருநாளை கொண்டாடியதாக மன நிறைவை அடைகின்றனர். 

வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி வௌவால் தோப்பு, அயோத்தியாப் பட்டணம் அடுத்த அக்ரஹாரநாட்டாமங்கலம் வௌவால் தோப்பு கிராமத்திலும், கல்வராயன் மலை கருமந்துறை வனச்சரக அலுவலக வளாகத்திலும் பழந்தின்னி வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.

இரவில் இரைத் தேடிச் செல்லும் வௌவால்கள், பகலில் மரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஓய்வெடுக்கின்றன. பல ஆண்டுகளாக வௌவால்கள் வாழ்ந்து வருவதாலே அப்பகுதி பகுதிகள் ‘வௌவால் தோப்பு’ என பெயர் பெற்றுள்ளன. பட்டாசுகளின் வெடிப்பதனால் ஏற்படும் அதிர்வுகளும், புகையும் வௌவால்களை பாதிக்கும் என்பதால்,  வௌவால் தோப்பு பகுதியில் வசித்து வரும் மக்கள், வௌவால்களுக்கு பரிவுகாட்டி தீபாவளி திருநாளிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.  வௌவால்களுக்கு பரிவுகாட்டி, பட்டாசுகள் வெடிக்காமல் பல ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடி மனிதநேயத்தை வெளிப்படுத்தி வரும் இந்த கிராம மக்கள், பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com